• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..,

BySubeshchandrabose

Dec 19, 2025

தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலில் இன்று அனைத்துக் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டார்

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில்

1,22,051 ஆண் வாக்காளர்களும், 1,26,955 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 29 வாக்காளர்களும் என மொத்தம் 2,49,035 வாக்காளர்கள் இருக்கின்றனர்

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில்

1,24,819 ஆண் வாக்காளர்களும், 1,31,065 பெண் வாக்காளர்களும், 97 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,55,981 வாக்காளர்கள் இருக்கின்றனர்

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில்

1,22,821 ஆண் வாக்காளர்களும், 1,30,130 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,55,981 வாக்காளர்கள் இருக்கின்றனர்

கம்பம் சட்டமன்ற தொகுதியில்

1,19,271ஆண் வாக்காளர்களும், 1,27,290 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,46,584 வாக்காளர்கள் இருக்கின்றன

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 4,88,962 ஆண் வாக்காளர்களும், 5,15,440 பெண் வாக்காளர்களும், 163 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10,04,564 வாக்காளர்கள் இருக்கின்றனர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு தேனி மாவட்டத்தில் 11,30,303 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் வெளியிட்டுள்ள நிலையில் 10,04,564 வாக்காளர்கள் இருக்கின்றனர்

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் வெளியீட்டிற்கு பிறகு 1,25,739 வாக்காளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.