கொடைக்கானல் வனப்பகுதியில் வழி மாறிய மான் குட்டிக்கு அடைக்கலம் கொடுத்த பசு மாடு குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை அருகே சாலையோர புதரில் வனப்பகுதியில் வழி மாறிய குட்டிமான் பதுங்கி நின்றது அப்போது சாலை ஓரத்தில் புல் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு தனது கன்று குட்டி என நினைத்து வருடி கொடுத்தது.
குட்டிமான் தனது தாய்போல் இல்லை என பின்வாங்கி வனப்பகுதிக்குள் சென்றது.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது




