விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் மற்றும் மேலாண்மறைநாடு ஆகிய கிராமங்களில் என் வாக்குச்சாவடி வெற்றிச் சாவடி என்ற தலைப்பில் தமிழகம் தலைகுனியாது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் பேசியது சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெம்பக்கோட்டை ஒன்றியம் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதுபோன்று வெற்றி பெறுவதற்காக இளம் தலைமுறை வாக்குகள் சிந்தாமல் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
அவரது கரத்தை வலுப்படுத்துவதற் காக கிளை நிர்வாகிகள் பூத்து கமிட்டி உறுப்பினர்கள், பி.எல் டூ நிர்வாகிகள், தீவிரமாக செயல்பட வேண்டும். என கூறினார் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.





