வடலூரில் வள்ளலார் சக்தி ஞான சபைக்கு எதிரே அமைந்துள்ள பெருவெளி தளத்தில், “வள்ளலார் சர்வதேச மையம்” கட்டுமானத்திற்கு எதிராக சன்மார்க்கிகள் திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட சன்மார்க்கிகள் பங்கேற்று இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழக பாஜக ஆன்மீக பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன்
தலைமை சன்மார்க்க சங்கத்தின் முன்னாள் தலைவர் படப்பை பாலகிருஷ்ணன்
திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சாது ஜானகிராமன் நடைமுறை சன்மார்க்க சங்கம் சென்னை மு.பா. பாபு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் வண்டலூர் விஜி ரங்கசாமி உட்பட பலர் எழுச்சிகரமாக உரையாற்றினர். “வள்ளலாரின் கொள்கை — உயிரினம் ஒருவருக்கு உதவி செய்வதே தலைமை”


வள்ளலாரின் போதனைகள் மனித நேயம், சமத்துவம் மற்றும் உயிரினங்களுக்கான அன்பை முன்னிறுத்துவதாகும். அதனால், அவருடைய அடிச்சுவடுகளில் உருவாக்கப்பட்ட பெருவெளி, அமைதி மற்றும் தியானத்திற்கான புனித தளம் என்பதால், “இங்கு எந்தவிதமான கட்டிட நிர்மாணமும் செய்யக் கூடாது” என்று அவர்கள் வலியுறுத்தினர். “எதிர்ப்பு அல்ல — சரியான இடத்தில் கட்டிடத் திட்டம் அமைக்க வேண்டும்”
கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சன்மார்க்கிகள் கூறுகையில்:
“அரசின் திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஆனால் கட்டிடத்திற்குப் பொருத்தமான புறம்போக்கு நிலங்கள் இருப்பதை அரசுக்கு நாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். தற்போதைய அரசு இதைத் தீர்த்து வைக்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டனர்,
இந்த கோரிக்கை நிறைவேறும் வரை: விழிப்புணர்வு நடவடிக்கைகள் அமைதியான போராட்டங்கள் ஆன்மீக சங்கங்களின் ஒருங்கிணைப்பு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.




