விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி, கி.ரெ.தி.அ. அரசு மேல்நிலைப் பள்ளியில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் .A.R.R. ரகுராமன் அவர்கள் 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் .தாமோதரக் கண்ணன், துணை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் உடன் இருந்தனர். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திரு.அழகர்சாமி நன்றி உரை ஆற்றினார்.





