அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69- வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயசிங் தலைமையில் அதன் நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகிலுள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்*

அதன் பின்பு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் டாக்டர்.வை.தினகரன் தொழிலாளர் நலச்சங்கம் (அரசு போக்குவரத்து கழகம்) சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தின் கௌரவ ஆலோசகர் ராமதாஸ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.





