மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் கோ புதுப்பட்டியில் அரசு சார்பில் பார்வையற்றவர்களுக்கான 75 பேருக்கு இடம் வழங்க உத்தரவிடப்பட்டது ஆனால் அவர்களுக்கு அரசு சார்பில் வேடர் புளியங்குளம் அருகே பட்டா 54 பேருக்கு வழங்கப்பட்டது.

இதனை மாற்றி தங்களுக்கு தோப்பூர் கோ புதுப்பட்டியில் வழங்க மீண்டும் பட்டாவை ஒப்படைத்தனர் அதனை தொடர்ந்து பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை தனக்கன்குளம் தாலுகா அலுவலக சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


24 பெண்கள் உட்பட 80 பேருக்கு மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்து வந்த திருநகர் காவல் நிலைய ஆய்வாளர் சந்தான போஸ் மற்றும் போலீசார் பார்வையற்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி மற்றும் தாசில்தார் கவிதா ஆகியோர் முன்னிலையில் பட்டா குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.




