துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கேரம் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மாநகர திமுக 2 ஆம் பகுதி மாணவரணி சார்பில் சிலுவத்தூர் ரோடு, ஸ்ரீ மீனாட்சி மகாலில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, ஜெயராமன், பகுதி செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட திமுக மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




