• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்..,

ByK Kaliraj

Dec 5, 2025

வெம்பக்கோட்டை தாவூ ஆ.லட்சுமியாபுரம் கிராமத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கல் குவாரி அமைக்கப்பட்டால் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு , நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் கல்குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.