திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தீபம் விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை மாண்புமிகு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

அறுபடை வீடுகளின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மதுரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் கல்தூனில் தீபம் ஏற்றலாம் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தாமல் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பித்தது இந்த நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
நேற்று மாலை விசாரணைக்கு வந்த போது மதுரை மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் கோவில் இணை ஆணையர் ஆகியோர் உடனடியாக 10 நிமிடத்திற்குள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக ஆஜராக வேண்டும் என நீதி அரசர் ஜி. ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக ஆஜராகி விளக்கம் அளித்தார் விளக்கத்தைக் கேட்டுக் கொண்ட நீதி அரசர் மனுதாரர் மட்டும் மேலே சென்று தீபம் ஏற்றி நேற்று இரவு 10:30 மணி அளவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் 144 தடை உத்தரவையும் ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார் இந்த நிலையில் நேற்று காவல்துறை சார்பில் 144 தடை உத்தரவு நடைமுறையில் தான் உள்ளது. நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் இன்று விசாரணை வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதால் வருகின்ற செவ்வாய்க்கிழமைக்கு இந்த வழக்கினை ஒத்தி வைத்தார்.








