மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

எஸ்ஐஆர் வந்த போது முதல் ஆளாக குதித்தது திமுக தான், முதல் ஆளாக உச்சநீதிமன்றம் சென்றது திமுக தான், இந்த இரட்டை வேடம் எதற்காக மக்களை ஏமாற்றவா.,
எஸ்ஐஆர் பணியை வரவேற்றது அதிமுக, களத்தில் நிற்பதும் அதிமுக எஸ்ஐஆர் மூலம் நேர்மையான, நடுநிலையான, சுதந்திரமான வாக்காளர் பட்டியல் கிடைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.,
மதுரைக்கு வரும் முதல்வர் நேரம் ஒதுக்கி பத்து தொகுதியில் உள்ள சாலைகள் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்ய வேண்டும், மதுரையில் உள்ள சாலைகள் ஐசியூ-வில் வைக்கக்கூடிய நிலைமையில் இருப்பதை உணர்ந்து, உடனடியாக அவசர சிகிச்சை கொடுப்பதற்கு முன் வருவாரா என்று அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகள் இந்த கோரிக்கையை வைக்கிறோம்.,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஏன் பாஜகவிற்கு ஆதரவாக கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, கலந்து கொள்ளாதது குறித்தும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் இது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிப்பார் என தெரிவித்தார்., முன்னதாக தொண்டர்கள் மத்தியில் பேசிய போது இன்று கார்த்திகை தீப திருநாளில் நீதிமன்ற உத்தரவை கூட நிறைவேற்ற முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது அது தனிப்பிரச்சனை என பேசினார்.,








