மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள காதிர்வலி தர்கா ஹசரத் செய்யது சாகுல் ஹமீது காதிர் வலி பாதுஷாவின் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

இதில் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை தர்கா கமிட்டி எத்திஹாசா சாகிப் சர்குரு என்ற இம்தியாஸ், அபுதாகிர், ஜாகிர் உசேன்,, ஜுலான் பாஷா, மற்றும் டிரஸ்ட் சித்திக் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.









