மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு சந்தனமாரியம்மன் கோவிலில் அதிமுக நகர் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

கிராமம் கிராமமாக சென்று நடைபெற்று வரும் வாக்காளர் சீர்த்திருந்த பணிகளை ஆய்வு செய்து, நீக்க வேண்டியவர்களை நீக்கவும், சேர்க்க வேண்டிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், இந்த பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து பயிற்சி வழங்கி வருகிறோம்.,
21 ஆண்டுகளுக்கு பின் இந்த எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகிறது, ஒரே முகவரியில் 360 பேர் இருக்கின்றனர், இறந்தவர்கள் 50 பேர் இருக்கின்றனர்., அதை கண்டுபிடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம், எஸ்ஐஆர் க்கு நாங்கள் வரவேற்று ஆதரவளித்ததோடு, முறையாக வெளிப்படை தன்மையோடு இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையாகவும் வைத்துள்ளோம்.,
டிட்வா புயல் உருவாகி இலங்கையில் துவம்சம் செய்துவிட்டது, இங்கு டெல்டா மாவாட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நீரில் மூழ்கி போய் விவசாயிகள் கண்ணீரில் இருக்கிறார்கள், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.,
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் உயிரிழப்புகள், பயிர் இழப்புகள் தடுக்க முடியாத ஒன்று, இந்த மக்களுக்கு தேவையான இழப்பீடு காப்பீட்டை முறையாக போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும்.,

இந்த சேதாரங்களை பார்க்கும் போது இன்னும் இந்த அரசு கவணமாக செயல்பட்டிருக்கலாமோ, மக்களை பாதுகாக்க தவறிவிட்டதோ என்ற கவலை விவசாயிகளிடையே, மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.,
புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும், அதுவே நிறைய பேருக்கு தெரியவில்லை.,
மழைக்காலங்களில் பேருந்து விபத்துகள் ஆழ்ந்த வேதனையை அளித்து வருகிறது., மழை காலங்களில் உரிய எச்சரிக்கை கொடுக்க வேண்டி இருக்கிறது, சாலை போக்குவரத்துகளுக்கு கூடுதல் கண்காணிப்பு கொண்டு வர வேண்டும்.,
இயற்கை பேரிடர்களை தவிர்க்க முடியாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால், பாதுகாப்பாக பேரிடர்களை எதிர்கொள்ள முடியும்., அதை இந்த அரசு ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்து வருகிறது, இந்த முறையும் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன, அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.,
வெறும் அறிக்கைகளை வெளியிடுவது மட்டுமே நமது கடமை என்று இருந்து விடக்கூடாது., முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நிறைய பேருந்துகள் ஓட்டை பஸ்களாக தான் இருக்கிறது., இதை கண்காணிக்க வேண்டும், இது நடைமுறையில் இருப்பது, அதை செயல்படுத்தினாலே போதும்., ஆனால் அக்கரை இல்லாத அரசாக உள்ளது.,
விளம்பர படுத்தவே, இன்னும் 4 மாதங்கள் தான் ஆயுள் இருக்கிறது, இந்த ஆயுளை நீட்டிக்க சலுகை மழை பொழிவதற்கு என்ன செய்யலாம் என அரசு யோசிக்கிறதே தவிர, இந்த பருவமழையிலிருந்து மக்களை பாதுகாப்பது என்று எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.,

அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது.,
வடகிழக்கு பருவமழையில் தோல்வியடைந்த திமுக அரசு சலுகை மழையில் மக்களை திருப்தி படுத்திவிடலாம் என ஆய்வு கூட்டங்களை நடத்தி கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது., எந்த சலுகை மழை கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.,
செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிச்சாமி, விரிவாக வீடியோ வகையில் விளக்கி சொல்லிவிட்டார்.,
கட்சியை ஒன்றிணைக்கிறேன் என்று சொன்னார், அப்படியே மறந்துவிட்டார், அதே போன்று தான் அதிமுகவினர் இன்னும் நிறைய பேர் வருவார்கள் என சொன்னதும், அதை அவரே மறைந்துவிடுவார்.,
கட்சியை ஒன்றிணைக்க போகிறேன் என சொல்லிவிட்டு வேறு கட்சியில் போய் சேர்ந்து கொண்டார், நட்டாத்தில் யாரை விட்டுவிட்டு சென்றுவிட்டார் என விளக்கமாக எடப்பாடி பழனிச்சாமி சொல்லிவிட்டார்.,
கொடநாட்டில் இருந்து வந்து அம்மா அவர்கள் ஏன் பதவியை எடுத்துவிட்டு இறப்பு வரை பதவியே கொடுக்கவில்லை என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும்., கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரை பற்றி பேச வேண்டாம் என அரசியல் நாகரீகம் கருதி இருக்கிறோம், அவர் அப்படியே பேசிக் கொண்டிருந்தால் மக்கள் நல்ல பதில் சொல்லுவார்கள்., என பேட்டியளித்தார்.,








