புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல ஜி கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
2025 ம் ஆண்டிற்கான உலக நவீன வாசக்டமி முழக்க நாளை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மாவட்ட குடும்ப நல அமைப்பின் சார்பில் துவங்கப்பட்ட இப்பேரணியை ஆட்சியர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான ஆனந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல கருத்தடை சிகிச்சையால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என்றும் பெண்களுக்கான கருத்தடை சிகிச்சையை விட மிகவும் எளிமையானது எனவும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த கருத்தடை சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு 1200 – ரூபாய் ஊக்கத்தொகை அரசு வழங்கி வருகிறது எனவும் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியும் துண்டு பிரசுரம் வழங்கியும் இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் Dr.கோமதி ஊரக நலப்பணி இணை இயக்குனர் Dr.ஸ்ரீபிரியா தேன்மொழி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் Dr. விஜயகுமார் துணை இயக்குனர் சிவகாமி கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








