• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுகவை குறித்து ஆவேசமாக பேசி காலணியை காட்டிய சீமான்

Byமதி

Dec 16, 2021

திமுக தான் பச்சை சங்கி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசி காலணியை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அண்மையில் யூடியூபர் மாரிதாஸ் கைதை எதிர்த்ததால், தன்னை சங்கி என பலர் விமர்சித்து வருவதாகவும், ஆனால் யூடியூபர் மீதான வழக்கு விவாதத்தில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அரசு தரப்பு வழக்கறிஞர் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “யார் டா உண்மையான சங்கி? திமுக தான் டா உண்மையான சங்கி என்றும்.. யாரடா பார்த்து யாரடா சங்கினு சொல்லுற.. செருப்பு இருக்கு பாரு.. எப்படிபட்ட செருப்பு நு பாத்துக்கோ?” எனக் கேள்வி எழுப்பிய சீமான், காலணியை காட்டி பேசியது சர்ச்சையாகியுள்ளது.