• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு..,

ByT. Balasubramaniyam

Nov 29, 2025

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சரத்குமார் பாச்சே கவுடா எம் .எல். ஏ வை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் நேரில் சந்தித்து,
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்ப மனு அளித்தார்.

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வுக்காக கர்நாடகத்திலிருந்து சமீபத்தில் ஜெயங் கொண்டம் வருகை தந்த சரத்குமார் பாச்சே கவுடா எம் எல் ஏ வை , அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் நேரில் சந்தித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்ப தெரிவித்து, அதற்கான தனது விருப்ப மனு மற்றும் முழு பொது வாழ்க்கை சேவை விவரங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார் .

எஸ் எம் சந்திரசேகரின் பொது வாழ்க்கை பயண விவரங்கள்.

இவர் 10 வயது மாணவர் பருவத்திலிருந்தே , நாட்டுப்பற்று, தியாக உணர்வு , பொது நலன் மற்றும் சமூக நலனில் அக்கறை மிக்கவர் . ஆதலால் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய விடுதலை போராட்ட வீரர்களின் தேச தொண்டினால் ஈர்க்கப்பட்டு, மாணவர் பருவத்திலே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் இயக்கத்தில் சிவாஜியின் கட்சி பணியால் , இவர் ஈர்க்கப்பட்டு, காங்கிரசில் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து,காங்கிரஸ் கட்சியில் பூத் லெவல் பொறுப்பாளராகவும், நகர காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றிய இவர் ,கடந்த 1993 ஆம் ஆண்டுஅரியலூர் நகர காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் . அதன் பின்பு 2002ஆண்டு முதல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். பின்னர் 2017ஆண்டு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019ஆண்டு அரியலூர் நகர தலைவராக தேர்வுசெய்யப்பட்டு 2022 வரை அப்பதவியில் பணியாற்றியுள்ளார் .

பின்னர் 2022 ஆண்டு,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினராக தேர்வு பெற்று தற்போது வரை மாநில கமிட்டி உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் உள்ளாட்சித் துறை தேர்தலில் 1996 -முதல்- 2001 வரை ,2006 முதல் 2011 வரையில் 2 முறை நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்து , பல்வேறு தொண்டுகள் ஆற்றியுள்ளார்.

மேலும், இவர், 1972ல் காமராஜர் அறிவித்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு நாள் சிறைவாசம்,அன்னை இந்திரா காந்தி கைது செய்த போது ஒரு நாள் சிறைவாசம்,1989 ஆண்டு மறைமலை நகர் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து காமராஜர் நகர் என்று.பெயர் சூட்ட வேண்டும் என்று வாழப்பாடி யார் அறிவித்த போராட்டத்தில் ஒரு வாரம் திருச்சி சிறைவாசம் , பின்பு 2000 ஆண்டு தலைவர் GK .மூப்பனார் அறிவித்த விவசாயிகள் போராட்டத்தில் வேலூர் சிறையில் ஒரு வாரம் சிறைவாசம் என காங்கிரஸ் இயக்கம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து சிறை சென்று கட்சிக்கு விசுவாசமாய் தற்போது வரை பணியாற்றி வருகிறார்.சமூக நலனில் அக்கறை மிக்க இவர் தற்போது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் ,இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின்மாவட்டத் துணைத் தலைவராகவும்,ஸ்ரீ சாயி பாபா பிரைமரி நர்சரி பள்ளியின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் ,பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.