• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கட்சியின் தலைமைக்கு சென்று கட்சி வலிமை பெற உதவும்..,

BySubeshchandrabose

Nov 28, 2025

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய அளவில் கட்சியின் உட்கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைத்து மாவட்டம் தோறும் கட்சியின் வலிமைப்படுத்துவதற்கு “சங்கதன் ஸ்ரீஜன் அபியான்” (அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம்) தொடங்கப்பட்டு அகில இந்திய அளவில் உள்ள மூத்த தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநில முன்னாள் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், தெலுங்கானா வப்பு வாரிய தலைவருமான சையத் அஸ்மத்துல்லா ஹுசைனி தேனியில் உள்ள தனியார் விடுதியில் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சையத் அஸ்மத்துல்லா ஹுசைனி

மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் தொகுதி மற்றும் ஒன்றியங்கள் வாரியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் கட்சியினை வலுப்படுத்துவதற்கான அவர்களின் கருத்துக்களை கேட்டறியும் பணி நாளை முதல் தொடங்க உள்ளது

காங்கிரஸ் கட்சியின் தமிழக முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் சிறந்தவர்கள் ஆனால் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக “அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம்” சார்பில் தலைவர்கள் நியமிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி மேலும் வளர்ச்சி அடையும்

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளை கலந்த ஆலோசித்து அவர்களின் அறிவுறுத்தலின்படி புதிதாக தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் அவர்கள் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வலிமைப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்த அவர்

முன்பெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கருத்துக்கள் மட்டும் காங்கிரஸ் தலைமைக்கு சென்று வந்தது தற்போது “அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம்” சார்பில் மாவட்ட தோறும் நியமிக்கப்படும் தலைவர்களின் மூலம் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கருத்தும் காங்கிரஸ் தலைமைக்கு சென்றடையும் இதனால் கட்சியின் உட்கட்டமைப்பு வலுபெறும் என தெரிவித்தார்.