தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வந்த நிலையில் கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் செல்வி ஆரோக்கியம்மாளுக்கு நகராட்சி ஆணையர் கண்மணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலர்கள் பூலோகராஜா, ஆனிரோஸ், இந்திரா, சகாய சர்ஜினாள், டெல்பின் ஜேக்கப், ஆட்லின், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், திமுக நிர்வாகிகள் பிரைட்டன், ரூபின், ஷ்யாம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








