கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் தென்னிந்தியாவின் பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக SIDA DEFENCE EXPO 2025 வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓய்வுபெற்ற மேஜர் மதன்குமார் : இளம் புதுமையாளர்களிடமிருந்து புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கண்டறிய iDEX வகிக்கிறது.இந்திய ஆயுதப்படைகளுக்கான நடைமுறை தீர்வுகளை மாற்றும் விதமாக ஆத்மநிர்பர் வாரத்திலும் தேசிய நோக்கை வலுப்படுத்துகிறது.
இந்தியாவில் மூன்று லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில் 2032-ம் ஆண்டு கோவையில் 75000 கோடி முதலீடு திட்டமிட்டுப்பட்டுள்ளதால் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி வளாகமாக மாறும் எனவும் இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் போர் திறன்களை வலுப்படுத்தும் விதமாக இந்தியாவில் உருவாக்கப்படும் பாதுகாப்பு அமைப்புகள் வலுவுபடுத்துவி விதமாக கோவை முக்கிய மையமாக திகழும் என தெரிவித்தார்.








