அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு,அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசு தொழிலாளர்,விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து , கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டம் தூங்கிய நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி, தெமுச மாவட்ட செயலாளர் ஆர் மகேந்திரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் பி துரைசாமி,ஐஎன் டியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என் சௌந்தர்ராஜன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு,மத்திய அரசு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத செயல்பாட்டை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொமுச நிர்வாகிகள் பிவி அன்பழகன்,கே கனகராஜ், ஆர் சங்கர், க. கருணாநிதி,கே சின்னையன், சித்திரவேல், சி ஐ டி யு நிர்வாகிகள் ஆர் சிற்றம்பலம், ஏஐடி யூசி நிர்வாகிகள் ஆர் தன் சிங் , ரெ நல்லுசாமி, து பாண்டியன், ஜி ஆறுமுகம், மா. நல்லம் மாள்,டி ஜீவா, மின்சார வாரியம் ஜெ.துரை, போக்குவரத்து துறை எஸ் திருவள்ளுவர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.








