அரியலூர்நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள அண்ணா சிலை அருகே, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு,நடந்த தர்ணா போராட்டத்தில்,விவசாய விலை பொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையான C2 + Rs 50 /- கொள்முதல் விலையை நிர்ணயம்செய்திட வேண்டும்,மின்சார திருத்த மசோதா 2020-25 ரத்து செய்து ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதை கைவிட வேண்டும்,டெல்லி போராட்டத்தின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட வேண்டும்,

உரம் பூச்சி மருந்து இடுபொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தி,மத்திய பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட ரூபாய் 8700 கோடி உர மானியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, தொழிலாளர்கள் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் அ பழனிச்சாமி,விவசாயபாதுகாப்பு சங்கத்தின் அரியலூர் மாவட்ட அமைப்பாளர் க.பாலசிங்கம்,மதிமுக விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் வாரண வாசி கி. இராஜேந்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அ விஸ்வநாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ கந்தசாமி,சி ஐ டி யு மாவட்ட செயலாளர் பி துரைசாமி,அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில செயலாளர் தங்க சண்முகசுந்தரம்,தமிழக விவசாயிகள் சங்கத்தின் உழவர் மன்ற நிர்வாகி முத்து பரமசிவம்,சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எல்ஐசி கே கிருஷ்ணன்,விவசாய சங்க நிர்வாகி பி பானுமதி,தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி ஜெ வரப்பிரசாதம்,ஆர் வைத்திலிங்கம்,ப. ஜெரோம்,கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி க. கரும்பாயிரம்,தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முமணியன் ,உள்ள கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம் ஜெகநாதன்,உள்ளிட்ட பலர் பேசினர்.








