இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக மதுரை, கோயம்புத்தூர், சென்னை சென்ற காலம் மாறுபட்டு சிவகாசியிலேயே இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் சிறப்பான மருத்துவ சேவையை பிப்ரவரி மாதம் முதல் கொடுத்து வருகிறது. நமது மதி ஒருங்கிணைந்த சுகாதார மையம். இந்த நிலையில் இன்று 25வது இருதய பைபாஸ் அறுவை சிகிச்சையை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

மதி குழுமத்தின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் மகேந்திர சேகர், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜோப் நேசராஜ் மற்றும் இருதய மயக்கவியல் நிபுணர் மருத்துவர் ஹாமில்டன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.









