மதுரையில் சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக மதுரை திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பாலாஜி நகரில் இருந்து திருப்பரங்குன்றம் மூலக்கரை மற்றும் விளாச்சேரி வரை புதிய பாலம் ஆனது கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த நிலைகள் பாலம் இறக்கத்தில் சாலைகள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பாலம் பல மாதங்களாக திறக்கப்படாமல் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது பாலம் திறப்பதற்கு முன்பே சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து பேட்ச் ஒர்க் வேலைகளும் நடைபெற்றது. இது தொடர்பாக ஏற்கனவே நமது அரசியல் டுடே செய்திகள் வெளியிட்டு இருந்தோம் இந்த நிலையில் பாலம் திறந்த 10 நாட்களில் பல இடங்களில் பாலம் தார் சாலைகள் ஆனது பெயர்ந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை தெரியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இந்த பாலத்தை தற்காலிகமாக மூடி பாதையை சரி செய்யும் வரை மேலும் பாலத்தில் உறுதி தன்மையை ஆய்வு செய்த பெண்ணை வாகனத்தை அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பாலத்தில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டு இருக்குமா என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

மேலும் தென்காள் கம்மாயில் தண்ணீர் அதிக அளவு இருப்பதால் தண்ணீரில் அலை போல் பாலத்தில் அடிப்பதால் மண் அரிப்பு ஏற்படுவதால் பாலம் சேதம் அடைவதாக சந்தேகம் தெரிவிக்கின்றன. பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.








