ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர் விழா கடந்த நவம்பர் 14 தேதி முதல் தொடங்கியது. இதுவரை நடைபெற்ற கோவை விழாவில் பல்வேறு போட்டிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டி 2.5 கிமீ, 5கிமீ, 10கிமீ 15கிமீ என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.
மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகிறது .அதன் ஒரு பகுதியாக நேரு விளையாட்டு அரங்கம் அருகில் கோயம்பத்தூர் விழா மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றனர்.









