இன்று (22/11/2025) தூத்துக்குடி மாவட்டம் – கூட்டுடன்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நட்புப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.17.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடத்தையும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









