• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரிய வகை சினேரியஸ் கழுகை விடுவிக்க கோரிக்கை

Byமதி

Dec 16, 2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்லுயிரின பூங்காவில் உள்ள சினேரியஸ் கழுகை விடுவிக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2017ல் ஏற்பட்ட ஒக்கி புயலின்போது குஜராத்தில் இருந்து திசை மாறி கன்னியாகுமரி வந்து காயமடைந்து விழுந்த அரிய வகை சினேரியஸ் கழுகு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒகி என பெயரிடப்பட்ட இந்த கழுகு குணமடைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கூண்டில் இருந்து அதை விடுவிக்க வேண்டும் எனவும், மீண்டும் அம்மாநிலத்திலேயே கொண்டு விட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் என சமூக நல ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.