மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை, தேனி மாவட்டங்களை இணைக்கும் மள்ளப்புரம் – மயிலாடும்பாறை சாலை உள்ளது, சுமார் 8 கிலோ மீட்டர் மலைப்பாதையாக உள்ள இந்த சாலையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான இந்த
வன பகுதியில் சாம்பல்நிற அணில்கள் சரணாலயமாக இருந்த போதும் மள்ளப்புரம் மயிலாடும்பாறை சாலையை அகல படுத்தி, போக்குவரத்து வசதி வழங்க வனத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது, இந்நிலையில் இந்த பகுதி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இந்த வனப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.,
அவ்வப்போது சாலையை சீரமைத்து வந்த வனத்துறையினர், புலிகள் சரணாலயமாக மாறிய பின் வாகனங்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகளோடு, சாலையை சீரமைக்கும் பணிகளையும் நிறுத்திக் கொண்டது.,

இதனாலும் சமீப காலமாக பெய்து வரும் மழை காரணமாகவும் இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது.,
தேனி மாவட்டத்திலிருந்து விவசாய பொருட்களை சந்தை படுத்த வரும் விவசாயிகளும், பள்ளி கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.,
இந்நிலையில் இந்த சாலையை சீரமைத்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களின் முக்கிய பிரதிநிதிகள் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.,
தேர்தலுக்குள் இந்த சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவில்லை எனில் இரு மாவட்ட பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.,










; ?>)
; ?>)
; ?>)