விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வலையப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

வலையபட்டி ஊராட்சியில் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலும் குடிநீர் கிணறில் முழுமையாக தண்ணீர் இருந்தும் சேதமடைந்த மோட்டார் பம்ப் பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்திலும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உடனடியாக மின் மோட்டாரை பாழுதுபார்க்கவும், குடிநீர் தொட்டியை பராமரிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.







; ?>)
; ?>)
; ?>)