• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி..,

ByS.Ariyanayagam

Nov 21, 2025

3 முறை நேரடியாக சென்றும், அதிகாரிகள் ஆய்வு செய்ததற்கு பின்பு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி*

திண்டுக்கல் மாவட்டத்தில் இணையத்தில் வாக்காளர் தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்யப்பட்டது 30% பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

  • திண்டுக்கல்லில் கடைசியாக 15 மற்றும் 16ல் நடந்த வாக்காளர் தீவிர திருத்த பணி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் மூலம் 3.5 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டு உள்ளது.
  • தற்போது மீண்டும் சிறப்பு முகாம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2124 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • கொடைக்கானல் மலை கிராமங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்து திரும்ப உடனடியாக பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • வாக்காளர்கள் பெயர் நீக்கும் பொழுது அதற்கான விவரம் பட்டியல்கள் வாக்குச்சாவடிகளில் பெயருடன் காரணத்துடன் ஒட்டப்படும்.
  • BLO மூன்று முறை நேரடியாக சென்றும், அதிகாரிகள் ஆய்வு செய்ததற்குப் பின்பே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்படும்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பழனி நகராட்சியிலும் தேர்தல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி என்பது ஜனநாயக பணி பெரிய பணியும் கூட அவர்களுக்கு உறுதுணையாக உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் பல சங்கங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுவரை இணையத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவங்கள் (பூர்த்தி செய்தது) 30% பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.