ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ராஜவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டின் எதிர்காலமான இளைய தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டுவதோடு சமூகத்தில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் உதவக்கூடிய உயர்கல்வி மற்றும் ஆய்வுகளில் மாணவிகள் ஆர்வத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு உதவி செய்யும் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்து கல்விச் சிறகுகளால் மாணவிகள் வெற்றிவானில் வலம் வர என கூறினார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் உரையாற்றுகையில், மாணவிகளின் தொடர் உழைப்பின் பலனாகப் பெற்ற பட்டமானது அவர்களின் வாழ்க்கையில் வெற்றிகளையும் பலவித முன்னேற்றங்களையும் பெற வாய்ப்பாக அமையும் என்று குறிப்பிட்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் மாணவிகளின் சாதனைகளையும் பல்கலைக்கழக அளவில் மாணவிகள் பெற்ற சிறப்புகளையும் குறிப்பிட்டுப் பட்டம் பெற்ற அனைவரையும் பாராட்டினார்.
2 தங்கப்பதக்கம் உட்பட பல்கலைக்கழக அளவில் 13 சிறப்பிடங்களைக் கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளதோடு, இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 503 பேர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







; ?>)
; ?>)
; ?>)