சென்னை கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் 9வது தெருவில் வசிக்கும் ரஞ்சித்குமார் என்பவரின் 1200 சதுர அடிச்சொத்துக்கு தொடர்பான விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ரஞ்சித்குமார் என்பவரின் சொந்த இடத்தில், அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தனின் ஆதரவாளரும், சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளருமான ஆர். கார்த்திக் என்பவர் அத்துமீறி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில், அந்த இடத்தில் ரஞ்சித்குமார் பாதுகாப்பிற்காக நிறுவியிருந்த சிசிடிவி கேமரா டிவிஆர் பெட்டிகளை திருடியதோடு, அத்துமீறி நுழைந்த குழுவினர் கம்பிகளையும் துண்டித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அதிமுக பிரமுகருக்கு ஆதரவாக துரைப்பாக்கம் ஆய்வாளர் பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு மேலாக, துரைப்பாக்கம் ஆய்வாளர் பிரபுவுக்கு எதிராக முன்னதாகவும் சர்ச்சை எழுந்தது. ஒன்றிய பிரபல தனியார் உணவகத்தில், வாரத்திற்கு பத்து ஆயிரம் ரூபாய்க்கு ‘ஓசி சாப்பாடு’ வாங்கி மேலாளரை மிரட்டிய விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அதன் பின்னர் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, இடம் விவகாரத்தில் போலீசார் நடத்தும் கட்டப்பஞ்சாயத்து காரணமாக, அப்பாவி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட ரஞ்சித்குமார், காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, தன் சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவைத்து உள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)