கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்து அரசர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று (நவம்பர்_14) ம் நாள் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது –

செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு பின் திரு கொடியேற்றம் நடைபெற்றது – முன்னதாக தவில், நாதஸ்வரத்துடன் கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது – திருவிழாவினை முன்னிட்டு தேவாலயம் வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது -சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த கிறிஸ்தவர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் தேவாலய கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.







; ?>)
; ?>)
; ?>)