தாம்பரம்–சேலையூர் பகுதிகளுக்கான பத்திரப்பதிவு அலுவலகம் மகாலட்சுமி நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு சார்பதிவாளராக ரேவதி பணியாற்றி வந்தார். இதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் நிலப்பதிவு செய்ய வந்தபோது, ரேவதி ரூ.2 லட்சம் லஞ்சம் கோரியதாக புகார் செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. இம்மானுவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் களமிறங்கினர். புகார்தாரருக்கு ரசாயன பவுடர் பூசப்பட்ட பணத்தை வழங்கி, சிக்கவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று மதியம், புகார்தாரர் லஞ்சத் தொகையை ரேவதிக்கு வழங்கியதும், மறைவிடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக விரைந்து வந்து அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரேவதியிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், பத்திரப்பதிவு அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ரேவதியின் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் தயாராகி வருகின்றனர்.
தாம்பரம் அலுவலகத்தில் நேருக்கு நேர் லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம், உள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







; ?>)
; ?>)
; ?>)