• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பழங்கால கார்களில் குமரிக்கு வந்த மும்பை சுற்றுலா குழு..,

‘ஓல்டு இஸ் கோல்ட் என்ற பழமொழியை உண்மையாக்கிய ஒரு நிகழ்வு. குமரி முக்கடல் சங்கமத்தில் 1950-க்கு முற்பட்ட பழங்கால கார்களில் கன்னியாகுமரிக்கு வந்த மும்பை சுற்றுலா குழு மும்பையைச் சேர்ந்த விண்டேஜ் கார் குரூப் எனும் நண்பர்கள் குழுவினர், 1950-க்கு முற்பட்ட அரிய பழங்கால கார்களில் கன்னியாகுமரியை வந்தடைந்து சுற்றுலா சென்றது. சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பழங்கால கார்கள் சேகரித்து பராமரிக்கும் பணியில் நீண்டநாள் ஈடுபட்டு வரும் மும்பை குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு தங்கள் கார் பேரணியுடன் பயணம் செய்வது வழக்கம்.

இவ்வாண்டு அவர்கள் நவம்பர் 1 ஆம் தேதி மும்பையிலிருந்து தங்கள் சுற்றுலா பயணத்தைத் தொடங்கினர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பயணித்த அவர்கள் நேற்று கன்னியாகுமரியை வந்தடைந்தனர். மொத்தம் 23 பழங்கால கார்களில் 40 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் இரண்டு தம்பதிகள் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள்; இப்பயணத்திற்காகவே அவர்கள் இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு கன்னியாகுமரியை வந்தடைந்த இக்குழுவினர். இன்று முதல் வேலையாக அவர்கள் பயணித்த பல்வேறு கார்களை மூன்று கடல்கள் சந்திக்கும்,கடற்கரையில் நிறுத்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதன்பின் விவேகானந்தப் பாறை, திருவள்ளுவர் சிலை, கடற்கரை, சூரிய அஸ்தமனக் காட்சி போன்ற சுற்றுலா அம்சங்களையும், சமீபத்தில் திறக்கப்பட்ட கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தையும் பார்வையிட்டனர்.

பழங்கால கார்கள் வரிசையாக நகரத்தில் சென்றபோது சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் கூடி கார்கள் அருகே புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இந்தப் பேரணியில் ஹிந்துஸ்தான் மோட்டார், அம்பாசடர், பியட், போக்ஸ்வேகன், டாடா, மெர்சிடீஸ் பென்ஸ் உள்ளிட்ட அரிய பழங்கால கார்கள் இடம்பெற்றிருந்தன. கன்னியாகுமரியில் சுற்றுலா காவலர் கிரீஷ், செந்தில் ஆகியோர் வரவேற்றனர்.

கன்னியாகுமரியில் சுற்றுலா முடித்த இக்குழுவினர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி மைசூரில் இவர்களது இந்த பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர்.