• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கட்சி விவகாரங்களில் எப்போதும் பிஜேபி தலையிடாது..,

BySeenu

Nov 11, 2025

தோல்வி பயம் எஸ் ஐ ஆர் எதிர்க்கும் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போது ஏன் பேசவில்லை, அதிமுக உட்கட்சி பிஜேபி தலையிடாது. கார் வெடிப்பு சம்பவம் புதுஜமாக செயல்பட்ட மத்திய அரசு நிர்மலா சீதாராமன். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த திமுக பத்து ஆண்டுகள் நடந்த எஸ் ஐ ஆர் குறித்த கேள்வி கேட்காமல் இப்போது நடப்பதற்கு மட்டும் எதஉள்ளனர் தெரிவிப்பது ஏன், தோல்வி பயம் காரணமாக எதிர்ப்பு தெரிவிப்பதாகும், முதல்வரின் தொகுதியிலேயே வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் துரிதமாக மத்திய அரசு செயல்பட்டுள்ளது விவரங்கள் வந்த பின்பு அது பற்றி பேசலாம், பிஜேபி கூட்டணி கட்சிகளின் உள் விவகாரத்தில் ஒருபோதும் தலையிடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை நகர் மற்றும் நீலகிரி ஆகிய அணி பிரிவுகளின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமானது கோவையில் உள்ள முதலிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இவருடன் தமிழகப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணித் தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்து அமல்படுத்தியது, ஏழை எளிய பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்று பாராட்டினார். நிர்மலா சீதாராமனுடன் பலமுறை வாக்குவாதம் செய்ததாகக் கூறப்பட்ட விக்கிரம ராஜா, தற்போது அவருக்குப் பாராட்டு விழா நடத்துவதைச் சுட்டிக்காட்டிய அவர், விக்கிரம ராஜாவின் மகன் தி.மு.க.வில் இருந்தாலும், நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்ததற்காக அவர் பாராட்டத் தெரிவிக்கிறார் எனக் குறிப்பிட்டார். கட்சியின் கூட்டணி என்பது அகில இந்திய தலைமை முடிவெடுத்தது.

இது தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவல்ல, பாரதிய ஜனதா கட்சி எடுத்த முடிவு. “இந்தக் கூட்டணியை வைத்துக் கொண்டு நாம் வெற்றி பெற வேண்டும்” என்று நிர்வாகிகளை அவர் வலியுறுத்தினார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியிலேயே வாக்காளர்களின் ஓட்டு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. “நமது கூட்டணியானது இன்னும் வலிமை பெறும். அகில இந்தியக் கூட்டணி எதற்கான வழியைச் செய்யும்” என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, பாரதிய ஜனதாவின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், அதுகுறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களை முன்னிறுத்தி அவர்களுக்காக செய்யக்கூடிய இந்த ஆட்சியின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேருங்கள். பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த அரசு மத்திய அரசு. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வரிக்குறைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனளிக்கிறது. தமிழகத்தில் வன்மா ஆட்சி நடந்து வருகிறது. அதைக் கேள்வி கேட்கும் அளவிற்கு பாஜக தொண்டர்கள் செயல்பட வேண்டும்.

அனைத்துத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்கமாக தி.மு.க. உள்ளது. சட்டமன்றத்தை வைத்துக் கொண்டு தீர்மானம் போட்டு வருகிறது தமிழக அரசு. மோடி அரசின் திட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிராக தீர்மானம் போடுகிறது. எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது, போராட்டம் நடத்துவது, கருப்புக்கொடி காட்டுவது ஆகியவற்றை தி.மு.க. அரசு கொண்டுள்ளது. மோடியின் திட்டத்தை தமிழகத்தில் வரவிடாமல் திராவிட அரசியல் செய்யக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், நீட் வந்த காலத்தில் வரவிடாமல் தடுத்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட் தேர்வு ரத்து’ எனச் சொல்லி தற்போது எண்ணற்ற ஏழை மாணவர்கள் பயன் பெற்று வருவதைச் சுட்டிக்காட்டினார்.

“தோழமைக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் அடுத்த வருடம் வரக்கூடிய மாறுதலை அனைத்துத் தொண்டர்களும் ஒன்றிணைந்து மக்களிடம் திட்டங்களையும், பாரதிய ஜனதா கட்சியைப் பற்றியும் கொண்டு செல்ல வேண்டும். கூட்டணி கட்சி இல்லாமல் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாத கட்சி காங்கிரஸ்” என்றும் அவர் விமர்சித்தார். “நான் மத்திய அமைச்சராக இருந்தாலும் பாஜகவின் ஒரு தொண்டனாகத்தான் இருந்து வருகிறேன். கூட்டணிக்கு மதிப்பு கொடுத்து கூட்டணி தோழர்களுடன் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். என்னையும் தொண்டனாக நினைத்துக் கொண்டுதான் உங்களுடன் பேசி வருகிறேன். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் ஊக்கம் கொடுக்க வேண்டும்” என்று நிர்வாகிகளை ஊக்கப்படுத்தினார்.

கூட்டத்திற்குப் பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: ஜி.எஸ்.டி. 22-க்கு பிறகு பொதுமக்கள் ஒன்றாக உபயோகப்படுத்துகிறார்கள். வணிகர்கள் இதனால் பெரும் அளவில் பயன் அடைந்துள்ளார்கள். ‘சர்வதேச புலம்பெயர்வோர் பதிவேடு’ (SIR) என்பது என்னவென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தெரியவில்லை. தி.மு.க. இதை பாஜகவின் சூழ்ச்சி எனப் பேசி வருகிறது. 1952, 57, 61, 65, 66, 83, 84, 87, 92, 93, 2000 வரை 10 முறை கணக்கெடுப்பு நடந்துள்ளது. இது தி.மு.க.வுக்குத் தெரியாதா? தி.மு.க. ஆட்சி நிர்குலைந்து உள்ளது. அதனால் தான் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்த்து வருகிறது. இ.டி. மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் குறைந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. போலியான முகவரிகள் கொண்டு ஏராளமான வாக்காளர்கள் உள்ளனர்.

உதாரணமாக, ஒரு வீட்டில் 80 பேர், ஒரு முகவரியில் 65 பேர், ஒரு முகவரியில் 30 பேர் என குளறுபடி உள்ளது. இதை வைத்துக்கொண்டு தான் முதலமைச்சர் தேர்தலில் ஜெயித்தாரா? என கேள்வி எழுப்பினார். தவறான கணக்குகளை வைத்துக் கொண்டு மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி பேசுகிறார். தேர்தல் ஆணையத்தை வலுவிழக்கச் செய்வதற்காக தி.மு.க.வும் காங்கிரஸும் இணைந்து செயல்படுகிறது. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, “கூட்டணிக் கட்சி விவகாரங்களில் எப்போதும் பிஜேபி தலையிடாது” என்று அவர் பதிலளித்தார். மேலும், “மாநில அரசு சட்டரீதியாக எதிர்கொண்டால் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசித்தனர்.