• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை..,

ByK Kaliraj

Nov 11, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷே பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜை ,தீப ஆராதனை நடைபெற்றது .சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போல் இனாம் மீனாட்சிபுரம் அழகம்மாள் கோவில், குகன்பாறை வடகாசி அம்மன் கோவில், கிழச்செல்லையாபுரம் சுந்தாளம்மன் கோவில் , இ மேட்டூரில் உள்ள காளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.