• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவிலில் 2 காவலாளிகள் வெட்டி கொலை!!

ByRadhakrishnan Thangaraj

Nov 11, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நச்சாடை தவிர்த்து தருளிய சாமி திருக்கோவில் 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க ஆகாய ஸ்தலமான பழைமையான இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இக்கோவிலில் இரவு காவலர்களாக பணியாற்றி வந்த தெற்குத் தவறான பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50) மற்றும் வடக்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் (வயது 65) ஆகியோர் கடந்த இரவு வழக்கம்போல் கோவில் வளாகத்தில் காவல் பணியில் இருந்துள்ளனர். ஆனால், இன்று அதிகாலை வரை அவர்கள் வீட்டிற்கு திரும்பாததால், பகல் காவல் பணி வேளைக்கு வர கூடடிய மாடசாமி என்ற ஊழியர்கள் இருவரும் கோவில் வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உடனடியாக சேத்தூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சேர்த்து காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்யப்பட்ட இருவரின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்குறைவிற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் பஷீனா பீபி .ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த இரட்டை கொலைச் சம்பவம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.