மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏல வார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற இந்த தலமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் திருவிழா நடக்கும் கோவில்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்து மதுரை மாவட்டத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாக இந்த ஆன்மீக தளம் கருதப்படுகிறது. தினசரி பக்தர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் கோவிலின் மேற்கு பகுதியில் வைகை ஆறு ஓடுகிறது. வைகை ஆற்றின் கரையில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது ஏடு எதிரேரும் திருவிழா தெப்பத் திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருத்தளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் அமாவாசை பௌர்ணமி நாள் என்று சிறப்பு தரிசனம் செய்பவர்கள் என நாளுக்கு நாள் பக்தர்கள் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கோவிலை சுற்றி எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் பாதையானது சேரும் சகதியுமாக பராமரிப்பின்றி காணப்படுகிறது இதனால் பிரதோஷம் பௌர்ணமி தினத்தன்று வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது மேலும் வைகையாற்றுப் பகுதிகளிலும் சுகாதாரமற்ற முறையில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி காணப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும் ஆன்மீகவாதிகளின் ஆத்ம திருப்திக்காகவும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஊராட்சி நிர்வாகம் சுகாதாரமாக வைத்திருக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)