• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் அவதி..,

ByKalamegam Viswanathan

Nov 10, 2025

மதுரை அவனியாபுரத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்ற நிலையிலும் அருகிலே காய்கறி மொத்த வியாபார கடைகளும் உள்ள நிலையில் கிராமப்புறங்களில் உள்ள வியாபாரிகளை கொண்டு வார சந்தை என்ற பெயரில் அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் வியாபாரத்திற்கு அனுமதி அளித்து கடை ஒன்றுக்கு 50 ரூபாய் விகிதம் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்று குற்றச்சாட்டு.

அவனியாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம் எங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் தினசரி இருபது ரூபாய் வாடகை பெற்று வருகின்ற நிலையில் தற்போது தனிநபர் சொந்த வருமானத்திற்காக அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் 10 மாதங்களாக வார சந்தை என்ற பெயரில் கடை ஒன்றுக்கு 50 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர் இதனால் எங்களுக்கு வியாபாரங்கள் பாதிக்கப்படுகின்றதாகவும் குற்றம் சாட்டினர்

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மதுரை மேயரிடமும் மனு கொடுத்தோம் எங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

உடனடியாக இந்த வார சந்தையை அப்புறப்படுத்த வேண்டும் தினசரி சந்தைகள் இருக்கும் பொழுது வார சந்தை என்று வைத்து போக்குவரத்திற்கு இடை தேர்வு செய்வதாகவும் விமான நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையில் இந்த வார சந்தை செயல்பட்டு வருவதால் விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் அரசு பேருந்துகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.