விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொட்டமடக்கி வெட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி விமர்சையாக நடைபெறும்.

வராகி அம்மனுக்கு பால் பன்னீர் பஞ்சாமிர்தம் திருநீறு சந்தனம் குறித்த 21 வகையான அபிஷேக்கர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது












; ?>)
; ?>)
; ?>)