கோவையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறை கண்டுபிடித்து விட்டாலும் அது குறித்த பரபரப்பு தமிழ்நாடு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்து கட்சியின் சார்பிலும் இந்த பிரச்சினையை பெரிதாக பேசுபொருள் ஆக்கி இருக்கிறார்கள். திமுக தரப்பிலோ குற்றவாளிகளை தான் கண்டுபிடித்து கைதும் உடனடியாக செய்தாயிற்று என்று சொன்னாலும் கூட எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. தொடர்ந்து ஆங்காங்கே கண்டனக் கூட்டங்கள் பேட்டிகள் என பொதுமக்களிடத்தில் இந்த பிரச்சனையை பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி எல் ஏ ரவுண்டானா அருகில் புதுக்கோட்டை பாஜக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில பாஜக தலைவி கவிதா ஸ்ரீராம் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மற்றும் பாஜகவில் உள்ள பொறுப்பாளர்களும் பெருமளவில் மகளிர் அணியினரும் திரண்டு வந்து கண்டனம் முழக்கமிட்டதோடு கருத்துரையும் ஆற்றினார்கள்.

அப்போதே பாஜக பிரமுகர்களில் ஒருவரான சிவசாமி கண்டியர் என்பவர் பேசுகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் ஆட்சியின் போது தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை இன்றைய முதல்வர் கதற கதற கற்பழித்தார் என்றும் நயன்தாராவுக்காக இப்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி மருந்து குடித்து விட்டார் என்றும் பெரியாரை மிகவும் கேவலமான வார்த்தைகளை சொல்லியும் கண்டன உரையாற்றினார். பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் எல்லாம் தவறான வார்த்தைகளை பயன்படுத்தாமல் சரியான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவித்தாலும் கூட சிவசாமி கண்டியர் என்பவர் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை சொல்லி கேவலமாக திட்டியும் காது கூசும் வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசியது.
அங்கிருந்த காவல்துறையை மட்டுமல்லாது அந்த வழியில் வந்து சென்ற பொது மக்களையும் முகம் சுளிக்க வைத்தது. ஏற்கனவே தமிழக முதல்வரை வசை பாடி அவர்கள் மீதெல்லாம் வழக்கு பாய்ந்து கொண்டிருக்கும் போது அருவருக்கத்தக்க இவரது பேச்சானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.













; ?>)
; ?>)
; ?>)