மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

சிவபெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய அரிசி மூலம் அன்ன அபிஷேகம் நடைபெற்று அன்ன அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளித்தார். காய்கறி மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து வில்வத்தால் சிறப்பு அர்ச்சனை செய்து தீப ஆராதனை காட்டப்பட்டது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டியினர், செய்திருந்தனர்.

இதில் முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன்ராஜா, சோலை கேபிள் ராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.













; ?>)
; ?>)
; ?>)