தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுகிறது.

இதற்கான பணியை, திங்கட்கிழமையன்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு பாராட்டு முன்னதாக, அப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு மாணவி கா.ஜூவைரியா வரைதல், வண்ணமிடுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், பா.நைனிகா தனி நபர் நாட்டுப்புற நடனப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று, இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 4 ஆம் வகுப்பு மாணவர் வை.ஹரிகரன் கற்றல் வெளிப்பாடு தனித்திறன் பெற்றமைக்காக, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மூவரையும் பாராட்டி, சால்வை அணிவித்து, தன் சொந்தப் பணத்தில் இருந்து ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், வட்டாரக்கல்வி அலுவலர் கலாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன், ஆசிரியை கமலிஸ்ரீ, தற்காலிக ஆசிரியை மலர்விழி, நித்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீனி.கௌதமன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நித்யா, பேரூராட்சி உதவிப் பொறியாளர் அர்ச்சனா, எழுத்தர் ஏ.சரவணன், ஒப்பந்ததாரர்கள் ஆர்.கே.பி.குமார், யோகேஷ், இளைஞர் அணி அரவிந்த், அப்துல் சலாம், தவசீலன், செல்வம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் வீர.சந்திரசேகர் வரவேற்றார். நிறைவாக, ஆசிரியர் ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)