கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 120 அடி உயர ராஜகோபுரம் —
பிரபா ராமகிருஷ்ணனின்முயற்சி வெற்றி. பக்தர்களின் கனவு நனவாகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்பைக் கொண்ட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு இதுவரை ராஜகோபுரம் இல்லாதது பக்தர்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்து வந்த நிலையில், தமிழக அரசு ₹21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த முயற்சிக்கான முழு நிதியையும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். தேவபிரசன்னம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் முடிந்த பின், திட்டம் மாநில அரசின் அனுமதியுடன் முன்னேறுகிறது.
கோவில் கடலோர பகுதியில் அமைந்துள்ளதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் தடையில்லா சான்று பெறுதல் அவசியமாகியுள்ளது. இதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை, சென்னையில் உள்ள எக்கோ சர்வீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ஆய்வுப் பணிகளை ஒப்படைத்துள்ளது.
வல்லுநர்கள் குழு தள ஆய்வு மேற்கொண்டு, காற்று, தண்ணீர், மண், சத்த மாசு தாக்கங்களை ஆராய்கின்றனர். ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இறுதி அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்தவுடன், கோவிலின் வரலாற்றில் புதிய அத்தியாயமாக ராஜகோபுர கட்டுமான பணிகள் தொடங்கும்.














; ?>)
; ?>)
; ?>)