மதுரை வில்லாபுரம் தங்க விநாயகர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கவிநாயகர் கோவில் அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும்நிர்வாகிகள் செந்தில்குமார் , கருணாநிதி, சந்திரசேகர், அனுசியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

உற்சவர் முருகன் வள்ளி தெய்வானைக்கு 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்ட இந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் முருகன் மற்றும் மணமகளாக தேவசேனா இருந்து திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கல்யாணம் முடிந்தபின் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .













; ?>)
; ?>)
; ?>)