விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கோபாலகிருஷ்ணன் கிளினிக் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார்

ஆரம்ப காலத்தில் 20 ரூபாய்க்கு மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தனர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு பின்பு அவரது தம்பி மருத்துவர் கண்ணன் என்ற ராஜசேகர் இந்த மருத்துவமனையை நடத்தி வந்தார். 20 ரூபாயில் ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்த்து தற்போது 50 ரூபாய்க்கு தன்னை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்த்து ஐம்பது ரூபாயில் ஊசியும் போட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். இராஜபாளையம் மற்றும் இராஜபாளையத்தை சுற்றி கிராம பகுதி ஏழை எளிய மக்கள் இவரை நாடி வந்து வைத்தியம் பார்த்து செல்வார்கள். ஏழை எளிய மக்களின் நலனின் அக்கறையோடு செயல்பட்ட மருத்துவர் கண்ணன் என்ற ராஜசேகர் நேற்று இரவு வரை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து இரவு வீட்டுக்கு சென்றவர் உணவு அருந்தி விட்டு படுத்தவர் நள்ளிரவில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்து விட்டார் .

இந்த செய்தி கேட்டு இராஜபாளையம் பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் அடைந்தனர் 50 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு இராஜபாளையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஏழை எளிய மக்கள் தங்களின் இறுதி அஞ்சலி செலுத்தினர்.













; ?>)
; ?>)
; ?>)