• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புண்வாரி அலுவலகத்தில் ஊழல் முறைகேடு..,

ByP.Thangapandi

Oct 27, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அனைத்து பணியாளர்கள் மற்றும் பொறியாளர் சங்கம் சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் குறித்த உறுதிமொழி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் நேர்மையாகவும் சட்ட விதிகளை பின்பற்றுவோம், லஞ்சம் வாங்கவும் அல்லது கொடுக்கவும் மாட்டோம், நேர்மை மற்றும் வெளிப்படத்தன்மையுடன் செயல்படுத்துவோம், பொது மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவோம் என்ற உறுதிமொழியுடன் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.