திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய விமான நிலைய வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு வாடகை கார்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

இவர்களுடன் சேர்ந்து வாடகை கார் இயக்குவதற்கு 50,000 முன்பணமாகவும் மாதம் 16ஆயிரம் செலுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. மேலும் முன்பணமாக வழங்கப்படும் ரூபாய் 50,000 திருப்பி தர மாட்டாது எனவும் கூறப்படுகிறது. மொத்தம் 50க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயங்கி வந்த நிலையில் ஒரு சிலர் அந்த தனியார் நிறுவனம் கேட்ட முன் பணத்தை செலுத்தி விட்டதாகவும், 13 நபர்கள் அந்த முன்பணத்தை செலுத்த முன் வராததால் அவர்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் கூறி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் தலைவர் சிவா தலைமையில் ஓட்டுநர்கள் மனு வழங்க வந்தனர்.

அப்போது செயலாளர் ராஜேந்திரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)