திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு, கண்ணபிரான் காலனியில் உள்ள பொதுமக்கள் இன்று (27.10.2025) காலை ஆர்பாட்டத்திலா ஈடுபட்டனர்.
அப்பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக இங்கு கழிவுநீர் வடிகால் மற்றும் சரியான சாலை வசதி இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய் பதிக்கும் பணியுடன் சேர்த்து சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைவில் செய்து தருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் அந்தப் பணிகள் தொடங்காமல் இருந்ததால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பிரதான சாலையை சரிசெய்ய வந்த ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, பணியை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்கும் பணியை தொடங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதனால் இப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது













; ?>)
; ?>)
; ?>)