செயற்கை கருத்தரித்தல் தொடர்பாக நடைபெறும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள அதர்ஸ் திரைப்படம் இதுவரை கண்டிராத ஒரு புது வகையான க்ரைம் திரில்லர் திரைப்படம் என அதன் இயக்குனரான அபின் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்……

புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் பிரபல நடிகர் முனீஸ் காந்த் மற்றும் 96 திரைப்பட புகழ் கௌரி கிஷன், புதுமுக கதாநாயகன் ஆதித்யா மாதவன், கதாநாயகி அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அதர்ஸ். வருகிற ஏழாம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் இன்று நடைபெற்றது.
எபிக் தொழில்நுட்பத்துடனான பிராட்வே திரையரங்கில் படத்தின் இயக்குனர் அபின் ஹரிஹரன்,நடிகர்கள் முனீஸ்கான் மற்றும் கதாநாயகன் ஆதித்யா மாதவன்,கதாநாயகி கௌரி கிஷன் மற்றும் ரசிகர்களுடன் ட்ரைலரை கண்டு ரசித்தார். பின்னர் பட குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த அபின் ஹரிஹரன், புதுமுக கதாநாயகன் கதாநாயகி ஆகியோரை வைத்து புதுமுக இயக்குனராக தான் இயக்கியுள்ள அதர்ஸ் திரைப்படம் இதுவரை வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படங்களிலேயே வித்தியாசமானது என்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகியுள்ளது.

இந்த படம் எனவும் குறிப்பிட்டார்.செயற்கை கருத்தரித்தலை வைத்து நடைபெறும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயற்கை கருத்தரித்தலை வைத்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த திரைப்படத்தை எடுத்ததாகவும் தெரிவித்தார்.மேலும் இப்படத்தில் நடிகர் முனீஸ் காந்த் காமெடி ரோலிலும் முக்கியமான கதாபாத்திரத்திலும் தோன்றுவதாகவும் இந்த கதைக்கு ஏற்றபடி கதாநாயகன் மற்றும் கதாநாயகியை தேர்வு செய்ததாகவும் முற்றிலும் ஒரு புதுமையான அனுபவம் இந்த திரைப்படம் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் சுட்டி காட்டினார்.













; ?>)
; ?>)
; ?>)